Tuesday, January 09, 2007

--------

காமராஜ் - 101 [ # 4.c ]

பகல் உணவுத் திட்டம்:

(தொடர் நான்கு மிகப் பெரிய பதிவாக இருக்கும் காரணத்தால், வாசிக்க எளிதாக சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.)


காமராஜ் சிந்தனையிலே தோன்றிய பகல் உணவுத் திட்டம் (இன்றைய சத்துணவு), அமைச்சரவையின் ஆய்விற்கு வந்தது. முதலைமச்சரோ, கல்வி அமைச்சரோ வாய் திறப்பதற்க்கு முன்பே, வருவாய் துறை செயலர் "அரிஜனப் பள்ளியில் போட்ட பகல் உணவால், கான்ட்ராக்டர்கலள் பிழைத்தர், ஆசிரியர்கள் பிழைத்தர், சிறுவர் சிறுமியர்க்குக் கிடைத்த பலன் அளவில் மிகக் குறைவே. ஒராயிரம் பள்ளிகளில் விரயமாவதைப் போல பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாமென்று சொல்ல வேண்டியது எனது கடமை. இத்திட்டத்தை கைவிட்டு விடுவதே நல்லது" என்று சொல்லி முடித்தார். ஒரு நொடியில் காமராஜ் மிகவும் சாதாரணமாக சிரித்தபடியே அதற்குப் பதில் கூறினார், அது எல்லாறுக்கும் இடப்பட்ட கட்டளைப் இருந்தது. "இயக்குனர் இதை குறித்துக் கொள்ளட்டும், விரிவான ஆணை பிறப்பிக்கையில், மறந்து விடாமல், இதையும் ஆணையில் சேருங்கள். 'பள்ளி பகல் உணவுத் திட்டத்தைக் காண்ட்ராக்ட் முறையில் நடத்தக் கூடாது.', வேறு எந்த முறையில் நடத்தலாம் என யோசித்து சொல்லுங்கள்" என்று கூறினார். முதல் அமைச்சர் இவ்வாறு ஆணை பிறப்பித்த பிறகும் செயலர் குறுக்கிட்டு "மாணவர்களுக்கு சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்கள் சாப்பிட்டு விடுவார்கள், அவர்கள் வீட்டுக்கும் அனுப்பிவிடுவார்கள். மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்" என்றார். மீண்டும் முதல் அமைச்சர் எவ்விதத் தயக்கமும் இன்றி சிரித்த முகத்தோடு "திட்டத்தில் உங்கள் ஞாபகமாக ஒரு விதியை சேர்த்து விடுங்கள். 'பகல் உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்களும், பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.' அந்த கூடுதல் சாப்பாட்டுச் செலவு, நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளப்படும்" என்று பதில் கூறினார். அப்புறம் யாரும் குறுக்கிடவில்லை, பகல் உணவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பகல் உணவுத் திட்டத்தை அரசு திட்டமாக நிறைவேற்றுவதற்க்கு முன்பே, பல ஊர்களில் பொதுமக்கள் காமரஜின் வேண்டுகோளை ஏற்று தங்கள் சொந்த பொறுப்பில் நிறைவேற்றிட முனைந்தனர். பகல் உணவுத் திட்டத்தை முதலில் பாரதியின் எட்டயபுரத்தில் தொடங்கினர். பகல் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய காமராஜ் பேசினார், அதில் சில "...நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.......என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசினார்.

மதிய உணவு திட்டத்தை ஒரு வாழ்க்கை தத்துவமாக கருதி தம் சக அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் இணைந்து முனைப்பான இறைப் பணியாகச் செய்தார். தமிழ்நாட்டின் செல்வந்தர்களும், வள்ளன்மை குணம் படைத்தோரும் பொருளுதவி செய்தனர். காமராஜின் மதிய உணவு திட்டம் பள்ளிகளுக்கு புதிய வரவுகளை உருவாக்கியது.

குழந்தைகளின் பசியைப் போக்கி எழுத்தறிவிக்கக் காமராஜ் செயல்படுத்திய மதிய உணவு திட்டம், மக்களிடையே அறிவை மட்டும் வளர்க்கவில்லை, பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த செய்தது. அதனால் அக்காலத்தில் நிலவி வந்த ஜாதிப்பாகுபாடுகள் மலிந்தன.


தொடர் நான்கு முழுவதையும் வாசிக்க...

Comments: Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?