Thursday, June 29, 2006

--------

காமராஜ் - 101 [ # 51 ]

மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜரின் விளக்கம்:
மதிய உணவு அளிப்பதால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தது என்பதை உறுதி செய்தவுடன், ஏழை குழ்ந்தைகளுகள் கல்விக்கு அதுவே வழி செய்திடுமென்பதை காமராஜர் பின்வருமாறு கூறினார்.
" அத்தனைபேரும் படிக்கணும், வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படி படிப்பான்? அவனுந்தானே நம் இந்தியாவிற்க்கு சொந்தக்காரன். ஏழைகக் குழ்ந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதை தள்ளி போட முடியுமா என்ன? இது மிக முக்கியம் என்பதால் உடனடியாக தொடங்கி விடனும். பணத்திற்க்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது, தேவைப்பட்டால், பகல் உண்விற்கென்று தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் ப்டிக்கனும். அவர்களுக்குந்தான் தேசம்"

முழுக்க முழுக்க தன்னார்வத் திட்டமாக துவக்கபட்ட மதிய உணவு திட்டத்தை, ஓராண்டு காலம் நடைமுறையில் சீர்தூக்கி பார்த்த பின்னர், 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்படக்கூடிய, அதே சமயம் சமுதாய பங்கேற்புடன் கூடிய திட்டமாக் மாநிலத்தில உள்ள எல்லா பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேவையான செலவினங்களில் 60% அரசும், 40% உள்ளூர் சமுதாயமும் என்ற அளவில் பங்கேற்பு இருந்திடும்.

இலவச மதிய உணவுக் குழுக்களுக்கு அனுமதி அளிப்பதற்க்கு எளிய நடைமுறைகள், அரசின் நிதியுதவி ஆகியவை உள்ளூர் மக்களின் மேற்பார்வையில் நடைமுறைபடுத்தபட்டதால், மிக விரைவாக எல்லாப் பள்ளிகளிலும் செயல்படுத்தக்கூடிய திட்டமாக இத்திட்டம் உருப்பெற்றது.

மதிய உணவு திட்டத்தின் மகத்தான வெற்றியை கீழ்கண்ட பட்டியல் தெளிவாக விளக்கும்:

( *** Please scroll down to see the tabular content... *** )

Year

Total Schools

School offered Mid-day meal

Total students benefited
1957-5822,2208,2702.20 lakhs
1958-5923,44911,5527.00 lakhs
1959-6024,58023,1367.75 lakhs
1960-6125,14924,5868.86 lakhs
1961-6227,13526,40611.8 lakhs
1962-6328,00527,25611.65 lakhs

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: அமைச்சு (64)

குறள்:
தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

பொருள்:
ஒரு செயலைப் பற்றிப் பலவையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, June 28, 2006

--------

காமராஜ் - 101 [ # 50 ]

காமராஜ் ஆட்சியில் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்ட முன்னுரிமை வரிசையானது, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது.

பிற மாநிலங்கள்:
திட்ட ஒதுக்கீடை பொறுத்தவரை - விவசாயம்/நீர்பாசனம் 41%, சம்தாய நலனிற்கு 27%, மின்சாரத்திற்கு 4% ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு:
திட்ட ஒதுகீடு - மின் வளர்ச்சிக்கு 40%, விவ்சாயம்/நீர்பாசனம் 29%, சமுதாய நலனுக்கு 22%, தொழிற்சாலைக்கு 5%, போக்குவரத்திற்கு 4%.

புதிய முறை விவசாயத்திற்க்கும், தொழில் வளர்ச்சிக்கும் மட்டுமின்றி, சமுதாயதின் பிற தேவைகளுக்கும் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. எனவே, மின்சார திட்ட செலவினங்களுக்கு முன்னுனிமை அளிக்கப்பட்டது.

சமுதாய நலப்பணிகளில் பெரும்பாலான திட்டங்களை மக்கள் பங்கேற்போடு செய்ய திட்டமிட்டதால், பிற மாநிலங்களை விட சமுதாய பணிகளுக்கு குறைந்த அளவிலேயே திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மின் திட்ட முன்னுரிமை காரணமாகத்தான், மின் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தையும், தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தையும் தமிழகம் எட்டுவதற்கு காரணமாக இருந்தது.

இதுவும் படிக்காத முதல்வர் காமராஜின் தொலை நோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடும் திறனுக்கு ஒரு சான்று.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: அறிவுடைமை (43)

குறள்:
அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவுஇலார்
அஃதுஅறி கல்லா தவர்.

பொருள்:
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, June 27, 2006

--------

காமராஜ் - 101 [ # 49 ]

1958 பஞ்சாயத்து சட்டம் மூலம் அதிகாரம் பரவலாக்கப் பட்டாலும், மக்களிடம் முதலீடு செய்யக்க் கூடிய சக்தி என்பது குறைந்தே இருந்தது. மாநில அரசிடம் போதிய நிதி வசதி இல்லை என்ற சூழ்நிலையில், அவர் அவர்களுக்கு இருக்கும் சக்திக்கு ஏற்ற அளவில் பங்கேற்று, கூட்டுறவு மூலம் உயர்வு காண்பது தமிழகத்திற்கு ஏற்றதாக இருக்குமென்று உணர்ந்திருந்தார் காமராஜ். எனவே காமராஜ் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு, கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கங்களில் அரசும் குறிப்பிட்ட அளவு பங்குகளை ஏற்றுக்கொண்டு உறுதுணையாக இருந்தது. மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை காமராஜ் ஆட்சி உருவாக்கியது. மக்களில் 84 விழுக்காட்டினர் கிராமக் கூட்டுறவு சங்கங்க்ளில் பங்கேற்று இருந்தனர்.

11,366 சிக்கன கடன் கூட்டுறவு சங்கங்கள், 322 வேளாண்மை வங்கிகள், 22 கிராமபுற வங்கிகள், 102 தொடக்க நிலை அடமான வங்கிகள், 15 மத்திய கூட்டுறவு வழங்குதல் மற்றும் விற்பனை சங்கங்கள், 288 விவசாய சங்கங்கள், 1396 பால் உற்பத்தியாளர் சங்கங்கள், 275 வீடு கட்டும் சங்கஙகள், ஒரு கூட்டுறவு நகரியம், 1401 தொடக்கநிலை பொருள் சங்கங்கள், 14 கூட்டுறவு அச்சக சாலைகள், 7 சுகாதார கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு லாண்டரிகள், 2 முடிதிருத்தும் சங்கங்கள் போன்ற கூட்டுறவு சங்கஙள் ஏற்படுத்தபட்டு செயல்பட்டு வந்தன. கிராமப்புற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்ககூடிய வகையில், கிராம கூட்டுறவு வங்கிகளை ஏற்படுத்த திட்டமிட்டு, அதே ஆண்டில் 15 வங்கிளை காமராஜ் அரசு ஏற்படுத்தியது. 1963-ம் ஆண்டு மொத்தம் 19,164 கூட்டுறவு சங்கஙக்ள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. இதன் வழியாக, மனிதனின் எல்லா செயல்பாட்டுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப கூட்டுறவு சங்கங்கள் த்மிழகத்தில் இருந்தன.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: இறைமாட்சி (39)

குறள்:
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

பொருள்:
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது, வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Monday, June 26, 2006

--------

காமராஜ் - 101 [ # 48 ]

காமராஜ் ஆட்சியில் "தமிழ் நாடு பஞ்சாயத்து சட்டம்" 1958-ல் கொண்டு வரப்பட்டது. பஞ்சாயத்து ஆட்சி ஆரம்பமாகும் விழாவாக காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 1960-ல் கொண்டாடபட்ட காந்தி ஜெயந்தியின் போது முதன் முதலாக 75 பஞ்சாயத்து யூனியன்கள் ஆரம்பமாயின. அதை அடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தில் 129 பஞ்சாயது யூனியன்கள் உருவாயின. 1961 காந்தி ஜெயந்தியன்று 169 பஞ்சாயத்து யூனியன்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் நாடு முழுவதும் காம்ராஜ் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12,000 பஞ்சாய்த்துகளும் செயல்பட ஆரம்பித்தன.
இவ்வாறு புதிய பஞ்சாயத்து முறை ஆட்சியை படிபடியாக மூன்று கட்டங்களாக, குறுகிய காலத்தி உருவாக்கி, அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிறைவேற்றிய சாதனை காமராஜ் ஆட்சியில்தான் நடந்தது.

புதிய பஞ்சாயத்து ஆட்சி, தமிழ் நாட்டில் ந்ன்கு வேரூன்றி செயல்பட்டது. கிராம நல வேளைகளை பஞ்சாயத்துகளே ஏற்று நடத்தும் சந்தர்பம் ஏற்பட்டது. விவசாயம், சாலை வசதி, கைத்தொழில், மாதர் நலம், சுகாதாரம், கால்நடை ம்ருத்துவ மனைகள் கட்டுவது, ஆரம்ப ப்ள்ளிகள் போன்ற பொறுப்புகளை பஞ்சாய்த்துகளும், பஞ்சாயத்து யூனியன்களுமே மேற்கொண்டு சிறபபாக செயல்பட்டன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் முடிவு செய்து செய்ல்படுத்திகொள்ள புதிய அதிகார பரவல் முறை 1958-ம் ஆண்டு ப்ஞ்சாயத்து சட்டம் மூலமாக நடைமுறைப் படுத்தபட்டது.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
சூழாமல் தானே முடிவுஎய்தும், தன்குடியைத்
தாழாது உஞ்ற்று பவர்க்கு.

பொருள்:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆகவேண்டிய செயலை விரைந்து செய்பவர்க்கு, அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் தானாகவே கிடைக்கும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Sunday, June 25, 2006

--------

காமராஜ் - 101 [ # 47 ]

இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த காமராஜ் தொழில் வளர்ச்சி விரைந்து நாடைபெற எளிய தெளிவான நடைமுறைகளை மேற்கொண்டதற்க்கு "மணலி சுத்திகரிப்பு" ஆலையே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக மணலி சுத்திகரிப்பு ஆலை திட்டமிடப்பட்டிருந்தது. ஆலைக்கென் மிகப்பெரிய நிலம் கையப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. என்வே நிலம் கையகபடுத்துவதில் ஏற்படும் பொதுவான கால விரயத்தை தவிர்த்திட காமராஜ் விரும்பினார். ஆலைக்கு கையப்படுத்த இருந்த நிலப்பரப்பில் 600 ஏக்கர் நிலம் மணலி ராமகிருஷ்ண முதலியாருக்கு உரிமையாக் இருந்ததது. எனவே ராமகிருஷ்ண முதலியாரை நேரடியாக வரவழைத்து திட்டத்தினுடைய நன்மையை பற்றியும் அவர்கள் அளிக்க கூடிய நிலப்பகுதியினுடைய தேவை பற்றியும் முதல்வர் காமராஜ் எடுத்துரைத்தார். ராமகிருஷ்ண முதலியாருடைய குடும்பத்தோடு இணைந்துவிட்ட மணலி ஊரில் இருக்ககூடிய நிலங்களையும், சொத்துக்களையும் இழப்பதில் தங்களுக்கு இருக்ககூடிய மனச்ச்ங்கடங்களையெல்லாம் முதல்வர் காமராஜிடம் ராமகிருஷ்ண முதலியார் எடுத்துரைத்தார். மணலி நிலத்தை தவிர வேறு எந்த நிலத்தை தருவதற்க்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தங்களுடைய மனதோடு ஒன்றிவிட்ட மணலி நிலத்தை மட்டும் தருவதற்க்கு தங்களுக்கு இருக்கும் தயக்கத்தை தயங்கி, தயங்கி காமராஜிடம் எடுத்துரைத்தார் ராமகிருஷ்ண முதலியார். ஆனால் காமராஜரோ, இந்த இடம்தான் சரியானா இடம், இந்த இடம் இல்லையென்றால் சுத்திகரிப்பு ஆலை தமிழ்நாட்டுக்கு வராது, வேறு மாநிலத்திற்க்கு சென்றுவிடும். இத்தகைய நிலையில் செண்டிமென்ட் ஆக பார்பது சரியாக வராது. தமிழ்நாட்டிற்கு பெரிய ஆலை வரும் என்பது மட்டு மனதில் தெளிவாக வையுங்கள் என்று தெளிவாக கூறினாலும் அவருக்கே உரிய பாணியில் பரவாயில்லை பார்க்கலாம் என்று கூறினார். உடனே சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான் தன்னுடைய நிலங்களை தருவதற்க்கு ராமகிருஷ்ண முதலியார் தன்னுடைய சம்மதத்தை முதலமைச்சர் காமராஜிடம் தெரிவித்தார்.

------------------------------

பால்: பொருட்பால்
அதிகாரம்: அறிவுடைமை (43)

அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவுஇலார்
அஃதுஅறி கல்லா தவர்.

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, June 22, 2006

--------

காமராஜ் - 101 [ # 46 ]

பாகல்மேடு மாநாடு...
மக்களாட்சி வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக 1957-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாகல்மேடு மாநாட்டை கூறலாம். சமுதாய வளர்ச்சித்துறையை தன்னிடம் எடுத்துக்கொண்ட பின்னர், காமராஜிடம் எழுந்த எண்ணம்தான் பாகல்மேடு மாநாடு.

மக்களுக்கும் அரசுக்கும் எல்லா மட்டத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமென விருப்பிய காமராஜ், மக்களின் பங்களிப்பு இல்லாமல் சமுதாய மேம்பாடு இருந்திட முடியாது எனக் கருதினார். அது போல, அரசு அதிகாரிகள் மக்களோடு ஒன்றினைந்து, எல்லா வகையிலும் மக்களுக்கு உதவி புரிய இருப்பதைக் காட்டிக்கொள்ளவில்லை என்றால், மக்களின் பங்களிப்பை முழுமையாக எதிர்பார்க்க முடியாது என்பதையும் காம்ராஜ் உணர்ந்திருந்தார். சிகப்பு நாடா முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் குறிப்பாக சமுதாய மேம்பாடு திட்ட செயல்பாடுகளில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட காமராஜ் விரும்பினார்.

எனவே, ஆட்சியாளர்களும் மக்களும் ஒரே இடத்தில் கூடி, கலந்துரையாடி, பிரச்சனைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டால்தான் விருப்புகிற, எதிர்பார்க்கிற வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் நடந்தேற வாய்ப்புண்டு என காமராஜ் கருதினார். அந்த வகையில் ஏற்பாடு செய்ய்பட்டதுதான் செங்கள்பட்டு மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதி, பாகல்மேடு பிர்கா மாநாடு. பிர்கா என்பது கிராம பஞ்ச்சாயத்திற்கும் மாவாட்ட பஞ்சாயத்திற்கும் இடைபட்ட ஐந்தாறு கிராமங்களை உள்ளடக்கிய 1958ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்திற்கு முன்பு செயல்ப்ட்டு வந்தது.

பாகல்மேடு பிர்கா கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இந்த மாநாட்டிற்க்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழக் முதல்வர் காமராஜ் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், பொது மக்களால் முன் வைக்கபடும் சமுதாய மேம்பாட்டுப் பிரச்சனைகளுக்கு உடனடியாக அங்கேயே தீர்வு காணப்படுமெனவும் அறிவிக்கபட்டிருந்தது.

முதல்வர் காமராஜ், தலைமைச் செயளர், சமுதாய மேம்பாட்டுத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சி தலைவர், கீழ்நிலை அதிகாரிகள் உடன் பாகல்மேடு மற்றும் பிர்கா கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக, அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் கண்காட்சியைத் தமிழக முதல்வர் காமராஜ் திறந்து வைத்தார்.

மாநாட்டின் அடிப்படையை முதல்வர் காமராஜ் முதலில் விளக்கினார். நேரிடையாக மக்கள் பிரச்சனைகளை அறிந்து, இயன்றவரை உடனடி தீர்வு காண தான் வந்திருப்பதாகவும் கூறிய காமராஜ், அரசு மீதான மக்கள் நம்பிக்கையை எற்படுத்தவும் தன்னுடைய அரசு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பதை மக்கள் உணர்ந்திட வேண்டுமெனவும் கூறினார். சுற்றுபுற கிராமத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி சமுதாய தேவைகளைக் குறித்து கலந்துரையாடுவதன் மூலமாக, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை எல்ல கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியுமென்றும் காமராஜ் கூறினார்.

மேலும், குழுமியிருந்த அரசு அதிகாரிகளைப் பார்த்து, மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவதுதான் அவர்களுடைய முதன்மையான பணியாக இருந்திட வேண்டும், அப்படி நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி அடைவதன் மூலமே மிகப்பெரிய செயல்களை எளிமையாக் அதிகாரிகளால் நிறைவேற்ற இயலும் என்பதையும் காமராஜ் எடுத்துரைத்தார்.

அதன்பின்னர், பிரச்சனகளைப் பற்றி பேச பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். தங்கள் கிராமத்தில் ஒருவர் கூட படித்தவர் இல்லையென்றும், தங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்றும் ஒரு கிராமவாசி கூறி, தங்கள் கிராமத்தை சேர்ந்த 36 பேர்களுடைய பெருவிரல் ரேகை இட்ட மனுவை காமராஜரிடம் அளித்தார். முழுமையாக அரசு செலவிலேயே தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென்று இன்னொறு கிராமவாசி கூறினார். நெடுந்தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வயல் வெளியில் தங்கள் கிராமத்தை சார்ந்த பெண் குழந்தை பெற்றதாகவும் அதனால் தங்கள் கிராமத்திற்க்கு மருத்துவ மனை வேணுமென்று மற்றொரு கிராமவாசி கூறினார். பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் வெள்ளத்தில் மூழ்கிப் போய்விட்டான் எனக்கூறி, தங்கள் கிராமத்திலேயே பள்ளிக்கூடம் வேண்டுமென்று ஒரு கிராமவாசி கூறினார். கிராம தொழிகளில் தங்களுக்கு பயிற்ச்சி அளிக்கப்பட வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களுடைய குடியிருப்புகளில் குடிநீர் கிணறுகளும் பள்ளிகளும் வேண்டுமென்வும் தங்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட வேண்டுமென்று தாழ்த்தப்பட்டோர் சார்பாக பேசியவர் கோரிக்கை வைத்தார்.

இப்படி இரண்டு பெண்கள் உள்பட ஐம்பது கிராமவாசிகள் தங்கள் குறைகளை முதல்வர் காமரஜரிடம் நேரிடையாக எடுத்துரைத்தனர். அதன் முடிவில், தலைமைச் செயளர், மாவட்ட ஆட்சித்தலைவர் பிற அதிகாரிகளுடன் முதல்வர் காமராஜ் ஆலோசனை மேற்கொண்டார். ஏழு கிராம சாலைகள் அமைக்கவும், ஐந்து கிண்றுகள் தோண்டவும், மூன்று பள்ளிகள் திறக்கவும் அந்த இடத்திலேயே முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் முழுமைப் பெற காலக்கெடு வரையறை செய்யப்பட்டது.

மக்களின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்த இந்த பாகல்மேடு மாநாடு முறையில் மக்கள் குறைகளுக்கு தீர்வு காணுப் முயற்சி தழிழ் நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. பாகல் மேடு பாணி மக்களிடையே பலத்த வரவேற்பை கண்ட திராவிட முன்னேற்ற கழக தலைவர் அண்ணாத்துரை இதற்காக காமராஜ் அரசை பாராட்டியதோடு மட்டுமின்றி, தன்னுடைய தொகுதியிலும் பாகல்மேடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சட்ட மன்றத்தில் வழியுறுத்தினார்.

எந்த ஜனநாயக நாட்டிலும் மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக் பாகல்மேடு முயற்சியை காமராஜ் அறிமுகப் படுத்தினார். இப்படி, அரசுக்கும் மக்க்ளுக்கும் இடைவெளி இல்லாத நிலையை காமராஜ் மேற்கொண்டதால்தான், அவருடைய அரசு மக்கள் அரசாக விளங்கியது என்பது உறுதி.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: தெரிந்து செயல்வைக (47)

குறள்:
தெரிந்த இனத்தொடு தேர்ந்து, எண்ணிச் செய்வர்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்.

பொருள்:
தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து, திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, June 21, 2006

--------

காமராஜ் - 101 [ # 45 ]

முன்னால் முதல்வர் குமாரசாமிராசாவின் திருவுருவப்படத்தை திறப்பதற்காக பாரத பிரதமர் நேரு ராஜபாளைய்த்திற்கு வந்திறுந்தார். முதவர் காமராஜரும் உடன் வந்திருந்தார். நேருவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு தரபட்டது. யார் யார் நேருவுக்கு மாலை அணிவிப்பது என பட்டியளிட்டு மாவாட்ட ஆட்சித்தலைவரால் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
விடுதலை போராட்ட வீரர் ஏ.கே.பெருமாள்ராஜா என்ற பேச்சி ராஜா அவர்கள் வழியாகவும் பிரதமர் நேரு போவதாக பயணத்தில் இருந்தது. எனவே, தன் தெருவிற்க்கு வருகின்ற நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்க தியாகி ஏ.கே.பெருமாள் ராஜா விரும்பினார். ஆனால் அதற்கான முன் அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. எனவே, தியாகியாக இருந்தாலும் , பிரதம்ர் நேருவுக்கு மாலை அணிவிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.
அவருடன் இருந்தவர்களும், "அனுமதி இல்லை, எனவே மாலை அணிவித்து மாட்டிக்கொள்ள வேண்டாம்" என அவரை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். விடுதலைக்காக பாடுபட்ட அந்த தியாகி கட்டாயம் மாலை அணிவித்தே ஆகவேண்டுமென உறுதி கொண்டிருந்தார். அதற்க்கான் எச்சரிக்கைகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.
பாரத பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் இருவரும் ஊர்வலமாக் வந்து கொண்டிருந்தனர். தொலைவிலிருந்தே தியாகி பெருமாள்ராஜா தனது வீட்டில் மாலையுடன் காத்திருப்பதை காமராஜ் பார்த்துவிட்டார். உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தை தியாகி பெருமாள் ராஜா வீட்டருகே கொண்டு செல்ல கட்டளையிட்டார். பெருமாள்ராஜாவை கூப்பிட்டு பிரதமர் நேருவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெருமாள் ராஜாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு நேருவிற்க்கு மாலை அணிவித்தார். இதன் வழியாக நாட்டிற்க்கு பாடுபட்ட ஒரு தியாகிக்கு நேர்ந்திருக்க கூடிய கசப்பான உணர்வுகளை தவிர்து விட்டார்.
இதற்க்கு அடிப்படை காரணம், மாட மாளிகையில் இருந்து ஆட்சி செய்யாமல் மக்களோடு மக்களாக இருந்த காரணத்தால் அவர்களுடைய உண்ர்வுகளை புரிந்துகொண்டு செயல்படக்கூடிய தன்மையை காமராஜ் பெற்றிருந்தார்.

------------------------------

பால்: பொருட்பால்
அதிகாரம்: குறிப்பறிதல் (71)

குறள்:
கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான், எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.

பொருள்:
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்துகொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, June 15, 2006

--------

காமராஜ் - 101 [ # 44 ]

1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் "அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்" என்றார்கள். ஆனால் காமராஜ் "அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்" என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
"சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசதுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்."

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை (63)

குறள்:
மடுத்தவாய் எல்லாம் படடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து.

பொருள்:
செல்லும் வழிகளில் எல்லம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, June 14, 2006

--------

காமராஜ் - 101 [ # 43 ]

ஒரு கிராமப் பஞ்சாயத்தில் உள்ள பெரிய குளத்தில், மீன்பிடிக்கும் உரிமையை யாருக்கு கொடுப்பது என்று முடிவு செய்வதற்க்கு உரிய கோப்பு ஒன்னு, முதல்வர் காமராஜ் பார்வைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலரிடம் இது குறித்து பேசிய காமராஜ், "இந்த குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை தனிபட்ட நபருக்கு கொடுத்தால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அவருக்கே போய்ச் சேரும். அதேபோல் 10 பேருக்குச் சேர்த்துக் கொடுத்தால், லாபம் முழுவதும் அந்த 10 பேருக்குத்தான் போகும். ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கினால், அந்த லாபம் அனைத்தும் அந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே போய் சேரும். இப்படியெல்லாம் செய்யாமல், அந்த கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்தினால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும். இதில் எது நல்லது" என்று கேட்டார். "தாங்கள் சொன்னபடி, கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்துவதுதான் நல்லது. ஆனால், அதற்க்கு சட்டத்தில் இடமில்லையே" என்று அந்த அதிகாரி கூறினார். உடனே முதல்வருக்கு கோபம் வந்து விட்டது. "எது நல்லது என்று நீங்களே கூறினீர்கள். அதை நிறைவேற்றச் சட்டவிதிகள் இடம் தரவில்லையெனில், அதை உடனே மாற்றி உத்தரவு போடுங்கள். மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்களல்ல" என்று உறுதியுடன் தெளிவாக கூறினார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றான்மை (99)

குறள்:
கடன் என்ப நல்லவை எல்லாம், கடன் அறிந்து
சான்றாண்மை மேகொள் பவர்க்கு.

பொருள்:
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றான்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, June 13, 2006

--------

காமராஜ் - 101 [ # 42 ]

அது ரேசன் காலம், ஒரு சிற்றூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்த ஊரில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டு, அவரது உபசரிப்பை காமராஜ் ஏற்றார். அதன் பிறகு, எட்டரை மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குதான் எரிந்தது; மைக் கூட கிடையாது. நல்ல இருட்டு, காமராஜ் பேச தொடங்கியதும், ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் எழுந்தது. பெரிய புள்ளியின் வீட்டு உபசரிப்பை காமராஜ் ஏற்றதற்கு கண்டனக் குரல் அது. "கருப்பு சந்தை ஒழிக" என்று அந்த குரல் ஒழித்தது. காமராஜ் பேச்சை நிறுத்தினார். கூட்டத்தின் மூலையில் இருந்த உருவத்தைப் பார்த்து "உனக்கு எவ்வளவு நாளா என்னைத் தெரியும்?" என்று கேட்டார். "முப்பது வருசமா" என்று பதில் வந்தது. " அப்புறம் என்னாண்ணேன்? உட்காரு" என்றார். காமராஜ் சொன்னபடி அந்த உருவமும் உட்கார்ந்தது. பிறகு காமராஜ் பேசினார். கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் குரலெழுப்பிய நபருக்கு காமராஜ் ஒரு பதிலும் சொல்லவில்லை.

சென்னை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, காமராஜை ஒருவர் கேட்டார் " நீங்கள் வந்து...". "கூட்டத்தில் சத்தம் போட்ட ஆளுக்கு பதில் சொல்லலேயே என்று கேட்கிறீங்களா? ஆமாம், அந்த ஆள் சத்தம் போட்டது நியாயம்தானே!" என்ற காமராஜ் விவ்ரமாக் சொன்னார்.

"அந்த ஆள் ஒரு தியாகி. சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர். எனக்கு 30 வருஷமாக தெரியும். நம்மை இந்த ஊரில் வரவேற்ற பெரிய புள்ளி, நெல்லை ஒழுங்கா ரேஷனுக்கு கொடுப்பதில்லை. அந்த ஆளுக்கும் இந்த தியாகிக்கும் ஆகாது. இந்த தியாகியை விலைக்கு வாங்க அந்தப் புள்ளியால் முடியவில்லை; முடியாது! இந்த தியாகி ஏதோ கடை வைத்துக்கொண்டு இருக்கிறார்.'அப்புறம் ஏன் அந்தப் பெரிய புள்ளியின் வரவேற்பை நாம ஏற்றுக்கொள்ளணும்னு' கேட்கிறீங்களா? நாம இங்கே வர்றோம்ணு இந்தத் தியாகிக்கு தெரிஞ்சா, கடன் வாங்கியாவது செலவு செய்வார். அப்போ அந்த பெரிய புள்ளியிகிட்ட போய்த்தான் கடன் வாங்குவார். இந்த தியாகி கடன்பட்டுத் தவிக்கிறதை நான் விரும்பலே! அதே நேரத்தில இவரோட தொண்டுக்கு நான் என்னைக்கும் மதிப்பு தர்றவன்! அது தியாகிக்கே தெரியும். இன்னும் மூனு நாள்ள, அங்கே நம்மை வந்து பார்பார், பாருங்க" என்று சொல்லி பேச்சை முடித்தார்.

காமராஜ் சொன்னபடியே மூன்றாவது நாள், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு அந்தா தியாகி வந்துவிட்டார். காமராஜ், தியாகிகளை மதிக்கும் பண்பு நலம் உள்ளவர்;

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: பழைமை (81)

குறள்:
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன்.

குறள்:
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Monday, June 12, 2006

--------

காமராஜ் - 101 [ # 41 ]

மதிய உணவு அளிப்பதால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தது என்பதை உறுதி செய்தவுடன், எழைக் குழந்தைகள் கல்விக்கு அதுவே வழி செய்திடும் என்பதை கமராஜ் பின்வருமாறு கூறினார்.
" அத்தனைபேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? அவனுந்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன். ஏழைக்குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதைத் தள்ளிப்போட முடியுமா என்ன? இது மிக முக்கியம் என்பதால் உடனடியாகத் தொடங்கி விடணும். பணத்திற்க்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது, தேவைப்பட்டால், பகல் உணவிற்க்கென்று, தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கனும். அவர்களுக்கும்தான் தேசம்."

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: வினைத்திட்பம் (67)

குறள்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

பொருள்:
ஒன்றை செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்க்கு ஏற்ற மன உறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவர்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, June 08, 2006

--------

காமராஜ் - 101 [ # 40 ]

காமரஜின் ஒரு மேடைப் பேச்சு - நவசக்தி 13.7.68

" ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கலங்கள் விரும்பவில்லை. எழைகள் என்றும் அடிமைகளாகவேதான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புக்றவர்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களை பற்றிக் கவலைப் படக்கூடாது.

நம்மைச் சாதிட்ச் சண்டையில் திருப்பி விடுகிறார்கள். என் ஜாதிக் காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்க்றார்கள். யார் மந்திரியாக இருப்பது பிரச்சனையல்ல. மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

நான் கூடப் பது ஆண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்தேன் என்பதற்காக நாடார்களெல்லாம் "நாடார் மந்திரியாக இருக்கிறார்; நாங்கள் எல்லாம் உழைக்க மாட்டோம், உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம்' என்று சொன்னால் முடியுமா என்ன?

நான் மந்திரியாக் இருந்தேன், எனக்கு அரசாங்கத்தில் வீடும் காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியை சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகி விடக் கூடாது.

நான் தேர்தலில் தோல்வி அடைந்தவன், ஏன் மீண்டும் மக்களை சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பணக்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.

நான் இனித் தூங்கப் போவதில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். நான் எத்தனை தடவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களை சந்திக்க தவற மாட்டேன். வெற்றி, தோல்வியைக் கண்டு கவலைப்படாதவன்."

- நவசக்தி 13.7.68

------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாய்மை (30)

குறள்:
மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.

பொருள்:
உள்ளம் அறிய உண்மை பேசுவபன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, June 07, 2006

--------

காமராஜ் - 101 [ # 39 ]

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்க்குத் தேவையான கனரக எந்திரங்கள் சோவியத் நாட்டிலிருந்து வரவிருந்தன. அந்த எந்திரங்களை சென்னை துறைமுகத்திலிருந்து நெய்வேலிக்கு எப்படி எடுத்து செல்வது என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து சாலை வழியாக எப்படி எடுத்து செல்ல முடியும்? மிகவும் பளுவான் எந்திரங்கள் அவை. வழியில் உள்ள பாலங்கள் அவற்றை எடுத்துச் செல்ல ஏற்றவைதானா? என்பதுதான் சிக்கல். இந்தச் சிக்கல் ஓராண்டு காலத்துக்குமேல் தீர்க்க முடியாததாகவே இருந்து வந்தது. அப்போது மத்திய அரசில் வர்த்தக அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்னமாசசாரியும், சென்னை மாநிலத்தில் தொழில் அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும் இருந்தனர்.

இந்த சிக்கலை ஒரு முடிவுக்கு கொண்டுவர தொழில் அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறையினரும் பிறரும், சென்னைத் துறைமுகத்திலிருந்து எந்திரங்களை நெய்வேலிக்கு கொண்டு செல்வதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்துப் பெரும் ஐயப்பாடுகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர். இடையில், கடலூர் துறைமுகத்துக்கு அந்த இயந்திரங்களை கொண்டுசென்று, அங்கிருந்து நெய்வேலிக்கு எடுத்து செல்ல முடியுமா என்றும் ஆலோசித்தனர். கடலூர் துறைமுகத்தில் கரையிலிருந்து நெடுந்தொலைவில் கப்பலை நிறுத்திவிட்டு, எந்திரங்களை இறக்கி வர இயலாது என்று முடிவுசெய்யப்பட்டு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மத்திய வர்தக துறை அமைச்சரோ "இதை விரைவில் முடிவு செய்யுங்கள்" என்று அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார். இது முதலமைச்சர் காமராஜ் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. காமராஜ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். டி.டி.கே-யும் வந்து கலந்து பேசுவதாக் தெரிவித்தார். டி.டி.கே வருவதற்க்கு முன்பாகவே இக்கூட்டத்திற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. " முடிந்தால் நாம் செய்வோம், முடியாவிட்டால், வேறு எந்த மாநிலதுக்கு பயன்படுமோ, அந்த மாநிலத்திற்க்கு எந்திரங்களை அனுப்ப சொல்லி விடுவோம்" என்ற முடிவுடந்தான் முதலமைச்சர் காமராஜ் கூட்டத்திற்க்கு வந்தார். கூட்டம் தொடங்கியது. " ஏன் சோவியத் நாட்டு எந்திரங்களை நமது சாலை வழியாக எடுத்து செல்ல முடியாது என்பதை எஞ்சினியர்கள் காமரஜிடம் விளக்க முயன்றார்கள்.

நிதானமாக கேட்டு முடித்த காமராஜ், "அவைகளை எப்படி எடுத்து செல்ல முடியும் என்பதற்கான யோசனைகளை சொல்லுங்க ... நம்ம எஞ்சினியர்களுக்கு இல்லாத திறமை வேறு யாரிடம், எங்கே இருக்கு? நாமதான், நம்மைவிட மற்றவர்களைக் கெட்டிக்காரர்கள் என்று நினைச்சு ஏமாந்துகிட்டுருக்கோம். நம்ம எஞ்சினியர்கள் நினைத்தா எதையும் சாதிப்பாங்க... இப்ப என்ன செஞ்சா, அந்த எந்திரங்களை நெய்வேலிக்கு கொண்டுசெல்ல முடியும்ணு சொல்லுங்கக் " என்றார்.

ஒருவர் எழுந்து நெய்வேலிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலங்களை வலுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமென்று விளக்க முய்ன்றார். மற்றொருவர், " நான்கு நாட்கள் டயம் கொடுங்க, எல்லாவற்றையும் விவரமாகத் தருகிறோம்" என்றார். முதலைமச்சர் காமராஜ் " நான்கு நாள் என்ன? பதினைந்து நாள் எடுத்துக்குங்க! இவ்வ்ளவு நாள் காத்திருக்கலியா? நான் டி.டி.கே-யை இரண்டு வாரம் கழிச்சே வரச்சொல்றேன். அதற்குள் தயார் பண்ணி கொடுங்க்க" என்று சொன்னார்.

காமராஜ் சொன்ன மாதிரியே திட்டம் தயாரிக்கப்பட்டு, நெய்வேலி வரை பாலங்கள் வ்லுப்படுத்தப்பட்டுச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. நம்மவர் இசைவு கொடுத்த பிறகு, சோவியத் நாட்டிலிருந்து எந்திரங் கள் எடுத்து வரப்பட்டு, நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஓராண்டு காலமாக தீர்வு காண முடியாமல் இருந்ததை எளிமையாக தீர்த்து வைத்தார் முதலமைச்சர் காமராஜ்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: வினைதிட்பம் (67)

குறள்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

பொருள்:
ஒன்றை செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதியை உடையவராக் இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, June 06, 2006

--------

காமராஜ் - 101 [ # 38 ]

ஒரு நாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ரூ.20 லட்சம் தருவதாக கூறினார். அந்த திட்டத்திற்க்கு 1 கோடி செலவாகும் என்றும், மீதி 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்தச் செல்வந்தர் கேட்டுக்கொண்டார். அந்த மருத்துவக்க் கல்லூரி, தனியார் நிர்வாகத்தில் இருகுமென்றும் கூறினார். இதற்குச் சம்பந்தப்பட்ட சுகாதரத்துறை அமைச்சரின் ஆதரவும் ஆமோதிப்பும் இருத்தது.

சிறிது காலத்திற்க்குப் பிறகு, இத்திட்டம் சம்பந்தமான கோப்பு அனுமத்க்காகக் காமராஜரின் பார்வைக்கு வந்தது. சம்பந்தபட்ட அமைச்சரைக் காமராஜர் அழைத்து, "80 லட்சம் ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் 20 லட்சத்தைப் போட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்களாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கிவிடுவார்கள். லாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது" என்றார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்த காமராஜ், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே செஸ் வரியாக வசூலித்த தொகையில் ரூ 1.30 கோடி இருப்பதை கேள்விப்பட்டு, அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் அரசு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு தஞ்சையில் 1 கோடிக்குமேல் செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார்.

இன்று தஞ்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி, காமராஜரின் முயற்சியினால் உருவானது என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: தெரிந்து வினையாடல் (52)

குறள்:
அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இன்நான்கும்
நன்குஉடையான் கட்டே தெளிவு.

பொருள்:
நிருவாகத்தின்மேக் அன்பு, நிருவாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களை செய்யும்போது உறுதி, பணியின்போது தவறான வழியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவது தெளிவு.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?